Posts

Showing posts from April, 2021

இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்றார்...

ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி. இந்த செங்கோட்டை மண்தான் சுதந்திர இந்தியாவுக்கு வீரவாஞ்சிநாதனையும், இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ்எஸ் பிள்ளையையும் இவ்வுலகிற்கு தந்தது. கிட்டப்பாவின் புகழ் தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ் இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ உலகளவில் விரிந்து பரந்தது. தமது 35வது வயதிலேயே ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின் உலகிற்கே அடையாளம் காட்டியவர் டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை என அழைக்கப்பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள். அவர் 1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று கணிதவுலகம் சிறக்க வல்லம் என்ற கிராமத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்தது. இவ்வேளையில் தந்தை இறந்ததால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது. அப்போது சாஸ்திரியார் என்னும் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தாம் இவ...