தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏன் தமிழகம் மழைபெறுவதில்லை? விரிவான பதிவு.
தமிழகம் தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெறுகிறது. ஆனால், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவான மழைபொழிவை பெறுகிறது. அதன் காரணத்தை அறியும் முன் தமிழகத்தின் பருவக்காலத்தை பற்றி சில தகவல்களை பார்ப்போம். தமிழகத்தின் ஆண்டின் சராசரி மழையளவு 914 மில்லி மீட்டர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவு வேறுபடும். தென்னிந்தியாவில் அதிக மழைபெறும் மாநிலம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அதிக அளவு மழையும் அதன் உள் பிரதேசங்களில் குறைந்த அளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் வடகிழக்கு பருவமழையையே அதிகம் நம்பியுள்ளது. உதாரணமாக ஓர் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் மழை அளவு கணிசமாகக் குறைந்துவிடும் தமிழகத்தின் மொத்த மழை அளவில் 47 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் 459.2 மில்லி மீட்டர் அளவு மழைபொழிவை பெறுகிறது தமிழகம். இதைத் தவிர்த்து, புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத...